ஊடக அடையாள அட்டையின் செல்லுபடி காலம் நீடிப்பு

ஊடகவியலாளர்களுக்கு 2019ம் ஆண்டுக்கு வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையின் செல்லுபடி காலத்தை நீடிக்க அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே 2020ம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டைகள் குறிப்பிடத்தக்க அளவு விநியோகித்திருந்த போதிலும் தற்போதைய சூழலை கருத்திற்கொண்டு, ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களை கவனத்திற்கொண்டு 2019ம் ஆண்டு வழங்கப்பட்ட ஊடக அட்டையின் செல்லுபடி காலத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2020ம் ஆண்டுக்காக விண்ணப்பிக்கப்பட்ட ஊடக அட்டைகள் இதுவரை கிடைக்காதிருப்பின் 2019ம் ஆண்டுக்கு வழங்கப்பட்ட ஊடக அட்டை எதிர்வரும் ஜூலை மாதம் வரை செல்லுபடியாகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435