ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் வேண்டாம் – சுதந்திர ஊடக இயக்கம் கோரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்ப நிலைமைகளுக்கு மத்தியில் ஒரு சில அரச நிறுனங்களின் ஊழியர்களுக்கு (ஆண்/பெண்) எதிராக வன்முறைச் செயற்பாடுகள் ஏற்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அரச ஊடகங்களில் இந்த நிலைமை மிகவும் அவதானத்திற்குரியதாயுள்ளது.
இது குறித்து அவதானம் செலுத்தி சுதந்திர ஊடக இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் சீ.தொடாவத்தவின் கையொப்பத்துடன் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,

பிரதமர் பதவி தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள சர்ச்சையின் காரணமாக, அரச ஊடக நிறுவனங்கள் மற்றும் ஒருசில ஊடகவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்படும் வெறுக்கத்தக்க அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்த உடனடியாக தலையிடுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
தொடர்பற்றவர்கள் அரச ஊடகங்களுக்குள் உள்நுழையும் சந்தர்ப்பம் மற்றும் அந்த ஊடகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சில சந்தர்ப்பங்கள் தற்போது அறியக்கூடியதாக உள்ளது.

அவ்வாறான அச்சுறுத்தல்கள் ஊடகவியலாளர்களின் தொழில் சுதந்திரத்திற்கும், சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்திரத்தன்மை என்பனவற்றுக்கும் அச்சுறுத்தலாகும் என சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டுகிறது.

கடந்த காலங்களில் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருந்;ததால், முறையான பரிசீலனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட வேண்டும்.
அதைவிடுத்து, மாற்றத்தின் மத்தியில் வேறு எவருக்கும் அவ்வாறான அசாதாரணம் நிகழாதிருக்க பொறுப்பேற்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435