ஊடகத்துறைக்கு எச்சரிக்கை மணியா? – உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம்

இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனமானது இல 2140/2 விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தமையை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என அச்சங்கம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் பிரேன்க் டி சொய்ஸா மற்றும் தலைவர் துமிந்த சம்பத் ஆகியோரின் கையெழுத்துடன் வௌியிடப்பட்ட அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இத்தீர்மானமானது ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். அது மாத்திரமன்றி தவறான முன்னுதாரணமாகும்.

ஊடகத்துறையும் பாதுகாப்புத்துறையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தமையானது அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மற்றொருபுறம் ஊடகவியலாளர்களின் தொழிற்சங்க உரிமைக்கு பங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான தீர்மானமாகவும் பார்க்கப்படுகிறது. ஊடக செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதன் ஆரம்பக்கட்டமாகவும் கருதுகிறோம்.

ஜனாதிபதி தேர்தல் உட்பட பல தேர்தல்கள் நடாத்தப்படுவதற்கான காலம் அண்மித்துள்ள இத்தகைய தருணத்தில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது உடனடியாக திருத்தப்படவேண்டும் என்றும் நாம் வலியுறுத்துகிறோம்.

ஊடக விடயம் சார்ந்த அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரை நியமிப்பது மிக அவசியமானது என்பதே எமது சங்கத்தின் கருத்தாகும்.

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினூடாக ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு எதிராக செயற்பட நாம் பின்நிற்கமாட்டோம் என்பதனையும் இங்கு சுட்டிக்காட்டுகிறோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435