உள்வாரி, வௌிவாரி பட்டதாரிகள் விரைவில் பட்டதாரி பயிலுநர் பதவிகளில்

உள்வாரி, வௌிவாரி பட்டப்படிப்புக்களை பூர்த்தி செய்தோரை பட்டதாரி பயிலுநர் பதவிகளில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

அதற்கமைய 45 வயதுக்குட்பட்ட 4667 பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

2012ம் ஆண்டு தொடக்கம் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்கள் இச்சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

பிரதமரும் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு நேற்று (10) நடைபெற்ற அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435