உயர் திறனுடைய தொழிலாளர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்புடன் குடியுரிமை

ஜப்பான் அரசாங்கம் ஜப்பானில் பணியாற்றும் உயர் திறனுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிடத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

ஜப்பானியர்களின் சனத்தொகை குறைவடைகின்றமை மற்றும் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை காரணமாக அந்நாட்டு
அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித்திட்டமானது இரண்டு அத்தியாயங்களாக நடைமுறைபப்படுத்தப்படவுள்ளது. அதில் முதலாவது அத்தியாயத்திற்காக 3 ஆண்டுகால தொழில்நுட்ப பயிற்சியும், ஜப்பான் மொழி அறிவும் அவசியமாகும்.

அவர்களுக்கு 5 வருடகால குடியிருப்பு விசா கிடைக்கும். எனினும், இது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு செல்லுபடியாகாது.

5 வருட காலப்பகுதிக்கு விசா கிடைக்கும் இந்தத் தொழிலாளர்கள், 10 ஆண்டுகள் வரை ஜப்பானில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.

ஜப்பான் அரசாங்கத்தினால் இந்தத் தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதிகளும் வழங்கப்படுகிறது.

உணவு, சமையல், கப்பல் மற்றும் கப்பல்கள், விருந்தோம்பல், உணவு சேவை, மீன்பிடி, உற்பத்தி, மின் மற்றும் மின்னணு உபகரணங்கள் தொழில்கள், வாகன பராமரிப்பு மற்றும் விமான போக்குவரத்து ஆகிய தொழில்துறைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் தங்குமிட வசதிகள் கிடைக்கும்.

இரண்டாம் அத்தியாயத்தின்கீழ் வகைப்படுத்தப்படும் பணியார்களுக்கு ஜப்பானில் தங்கியிருப்பதற்;கான குறிப்பிட்ட காலப்பகுதி வரையறைக்கு உட்படுத்தப்படவில்லை.

இந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தங்குமிட வசதிகள் வழங்கப்படுவதுடன், அவர்களது உறவினர்கள் ஜப்பானில் தங்கியிருப்பதற்கான வசதிகளும் கிடைக்கவுள்ளது.

பல்வேறு நாடுகளில் குடிவரவு மற்றும் குடியேற்ற கொள்கைகளை மாற்றுவதன் காரணமாக ஜப்பானில் தொழில் புரியும் தொழிலாளர்களின் இந்த விசா வருடாந்தம் பரிசீலனை செய்யப்படும். ஜப்பானிய அரசாங்கம் பாரிய சம்பவங்களுக்காக விசாக்களை ரத்து செய்யவும் உள்ளது.

ஜப்பானில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை காரணமாக அமையும் என நம்பப்படுகிறது.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மற்றும் ஜப்பான் அகதிக் கொள்கையை மீறி ஜப்பானில் தங்கியிருக்கும் புகழிடக் கோரிக்கையாளர்களின் நாடுகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் சம்பளம் ஜப்பானிய தொழிலாளர்களின் சம்பளத்திற்கு சமமானதாக இருக்கும் என அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435