இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் கற்க புலமைப்பரிசில்

இந்தியாவிலுள்ள குருகுலம் மற்றும் கற்கை நிறுவனங்களில் கட்புல ஆற்றுகைக் கலை டிப்ளோமா கற்கைநெறிகளை கற்பதற்கான புலமைப்பரிசில்களை வழங்க அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு முன்வந்துள்ளது.

பாரம்பரிய இசை, பாரம்பரிய நடனம் மற்றும் ஓவியம் என்பவற்றை கற்பதற்கான விண்ணப்பங்களை இந்திய வௌிவிவகார அமைச்சின் கலாசார விவகார கவுன்சில் கோரியுள்ளது.

புலமைபரிசிலுக்கு விண்ணப்பிப்பவர்கள், 20-25 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும், க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன், விண்ணப்பிக்கும் துறையில் “B” சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும் என்று இந்திய கலாசார நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சையில் ஆங்கில பாடத்தில் குறைந்தது “s” சித்தியடைந்திருத்தல் வேண்டும். ஒரு வருட புலமைப்பரிசில் வழங்கப்படும். அதன் பின்னர் பெறப்படும் பெறுபேறுகளுக்கமைய மூன்று வருடங்கள் வரை வழங்கப்படும்.

புலமைபரிசில்களுக்கான விண்ணப்பங்களை கொழும்பு, விவேகானந்தா காலசார மத்தியநிலையம், இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம், கண்டி, இந்திய பொது தூதரகம், அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது இந்திய உயர்ஸ்தானிகராலய இணையதளத்திலிருந்த தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.

விண்ணப்பங்களை விவேகானந்தா கலாசார மத்திய நிலையத்திற்கு எதிர்வரும் 23ம் திகதி வரை காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரை கையளிக்கலாம். நேர்முகத்தேர்வும் உடனடியாக நடத்தப்படும். சான்றிதழ்களின் மூலப்பிரதிகளையும் கொண்டு செல்லுதல் அவசியம்.

மேலதிக தகவல்களுக்கு கொழும்பு, சுவாமி விவேகாந்தா கலாசார மத்திய நிலையத்திற்கு 011 2684698 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது iccrcolombo2@gmail.com மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435