முகாமைத்துவ பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இறுதித் திகதி நீடிப்பு

இலங்கை மத்திய வங்கியில் முகாமைத்துவ பயிற்சியாளரை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Online recruitment System ஊடாக விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதியே நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்தியவங்கியின் மனிதவளப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்,

ஏற்கனவே வௌியிடப்பட்ட விளம்பரத்தில் இம்மாதம் 15ம் திகதி விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் தற்போது இம்மாதம் 22ம் திகதி வரை அத்தினம் நீடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இறுப்பினும் ஏற்கனவே வௌியிடப்பட்ட விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட கல்வித் தகமைகளில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களையும் விண்ணப்பப்படிவத்தையும் https:/www.cbsl.gov.lk/en/careers என்ற இணையதள முகவரியினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435