இலங்கை பணத்தை கடத்த முயன்ற இலங்கையர் கைது

இலங்கை பணத்தை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கொண்டு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று (28) பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

ஶ்ரீலங்கா எயார் லைன்ஸ்ஸுக்கு சொந்தமான எஸ்.கிவ். 469 விமானத்தினூடாக காலை 3.30 மணிக்கு செல்லவிருந்த குறித்த நபர் திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான நபர் என்று சுங்கத் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

சிங்கப்பூர் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் குறித்த நபர் தொடர்பில் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சுங்கத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்தே கைது செய்யப்பட்டார்.

தனிப்பட்ட பொருட்களடங்கிய பெட்டியில் 1000, 5000 நோட்டுக்களில் ரூபா 48,99,000 (நாற்பத்தெட்டு இலட்சத்து தொன்னூறாயிரம்) மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத்திணைக்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்

மூலம்- அத தெரண/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435