இலங்கை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டத்தில்

இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் முன்னிலையில், அதன் பணியாளர்கள் சிலர் நேற்று (29) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கொடுப்பனவு என்பன வழங்கப்படாதமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கனியவளக் கூட்டுத்தாபனத்தில், சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் சேவைகாலத்தை நிறைவுசெய்த பணியாளர்கள், பலர் ஓய்வுபெற்றுள்ளதுடன், மேலும் சிலர் ஓய்வுபெறவும் உள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பணியாளர்களுக்கு, வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கொடுப்பனவு என்பன சுமார் ஒரு வருடகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பணியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கூட்டுத்தாபனத்தின் பொத்துக்கூட்டத்தை நடத்தி தீர்மானம் மேற்கொள்ளாமல், நான்கு அதிகாரிகள் மாத்திரம் இணைந்து இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையானது, ஓய்வுபெற்றுள்ள மற்றும் ஓய்வுபெறவுள்ள பணியாளர்களுக்கு பாரிய அநீதி எனத் தெரிவித்தே குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435