இலங்கையர்களை அழைத்துவருவதற்கான விமான சேவைகள் 31 இல் மீள ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விமான சேவைகள் எதிர்வரும் 31 முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய, டுபாயில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வகையில் ஜுலை 31 மற்றும் ஓகஸ்ட் முதலாம் திகதிகளில் இரண்டு விமானங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு விமானங்கள் மூலம் சுமார் 600 இலங்கையர்களை அழைத்துவர எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளை, குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் ஜோர்தான் போன்ற நாடுகளை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் 50 ஆயிரம் இலங்கையர்கள் தங்களை மீளவும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று கோரி தூதரகங்களில் பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் வேலையிழந்துள்ள மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435