இரு நாள் சுகயீன லீவு போராட்டத்தை ஆரம்பித்துள்ள அதிகாரிகள்

தமது சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கூறி இலங்கை நிர்வாகசேவை சங்க அங்கத்தினர்கள் நேற்றும் இன்றும் (11) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பது தொடர்பில் பல பேச்சுவார்த்தைகள் நடாத்தியபோதிலும் இதுவரை சரியான தீர்வை முன்வைக்க உரிய அதிகாரிகள் தவறியுள்ளனர் என்று இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

எமது சம்பள பிரச்சினை தொடர்பில் பிரதமர், அமைச்சரவை உபகுழு அங்கத்தினர்கள், அமைச்சர், அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் எழுத்து மூலமாகவும் அறியப்படுத்தியுள்ளோம். எனினும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை. இவ்விடயத்தில் அரசியல் தலையீடு அதிகரிப்பதனால் நிறைவேற்றுக்குழு மற்றும் மாவட்டக் குழுக்கள் இணைந்து பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

அதற்கமைய நேற்றும் இன்றும் சுகயீன லீவு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நிர்வாக சேவை நாடி வரும் பொதுக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் என்பதனால் எமது சேவை கிடைக்காது என்பதை முன்கூட்டியே தெரிவித்தோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435