இம்முறை பாதீட்டில் 20,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

வேலையற்ற பட்டதாரிகள் 20,000 பேருக்கு தொழில் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இவ்வாண்டு பாதீட்டில் கவனம் செலுத்தப்படும் என்று பொருளாதார அலுவல்கள் மற்றும் தேசிய கொள்கை இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் வினாவுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் உள்வாரி பட்டதாரிகளுக்கு மாத்திரமன்றி, வௌிவாரி பட்டதாரிகளுக்கும் அரசாங்க நியமனங்கள் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

கடந்த வருடம் தொழிலற்ற பட்டதாரிகளுக்கு அரச உத்தியோகம் வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரசிங்க அனுமதி வழங்கினார். பல கட்டங்களாக நியமனங்களை வழங்க திட்டமிடப்பட்டது. அதற்கமைய முதற்கட்டமாக 15,000 பேருக்கு நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி அரசியல் குழப்ப நிலை நாட்டில் ஏற்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435