இபோச ஊழியர்கள் போராட்டம் தோல்வி

சம்பள உயர்வு கோரி நாடு தழுவியரீதியில் இலங்கை போக்குவரத்துசபை ​ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப்போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக இபோச தலைவர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்

இலங்கையில் 107 இபோச டிப்போக்கள் இயங்கியபோதிலும் 32 டிப்போக்கள் மாத்திரமே வேலைநிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்டன என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்னர் ஐதேக தலைமையகமான ஶ்ரீகோத்தாவிற்கு முன்பாக சம்பள பிரச்சினையை முன்னிருத்தி போராட்டதில் ஈடுபட்ட குறித்த ஊழியர்கள் அப்போராட்டத்தை நிறுத்திக்கொண்டு நேற்று (12) நாடுதழுவிய போராட்டத்தை மீண்டும் நள்ளிரவு பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். எனினும் கொழும்பு, கண்டி, குருநாகல், கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்ட பஸ்கள் பணியில் ஈடுபட்டது.

நாடு முழுவதும் 1400 பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன. அவற்றில் ஆயிரம் சேவைகள் நேற்று இடம்பெற்றன. இதனடிப்படையில் நேற்று தொழிற்சங்கத்தினர் மேற்கொண்ட வேலைநிறுத்தப்போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435