இந்திய நபருக்கு நபர் 900,000 திர்ஹம் பெறுமதியான கார் பரிசு – UAE யில் சம்பவம்

துபாயில் தச்சனாக பணிப்புரியும் இந்திய நபர் 900,000 திர்ஹம் பெறுமதியான காரை பரிசாக வென்றுள்ளார்.

பல்விர் சிங் என்ற 31 வயதான நபர், அவருடைய சிம்மை புதுப்பித்தபோது அவ்விலக்கம் சீட்டிழுப்பில் வெற்றியடைந்ததையடுத்து மெக்லாரென் 570S ஸ்பைடர் என்ற ஸ்போர்ட்ஸ் காரை பரிசாக பெற்றுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொலைத்தொடர்பு கம்பனியான டு நடாத்திய அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பில் அவருக்கு இப்பரிசு கிடைத்துள்ளது.

உள்ளூர் தரகரினூடாக அக்காரை 600,000 திர்ஹம் (11.4 மில்லியன் ரூபா) விற்பனை செய்த பல்விர் சிங் அப்பணத்தை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

மாதம் 1,900 திர்ஹம் சம்பளத்திற்கு பணியாற்றி வந்த அவர் தனக்கு கிடைத்த இவ்வதிர்ஷ்டத்திற்கு தனது இரண்டாவது மகன் பிறந்த அதிர்ஷ்டத்தின் காரணமாகவே இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைத்தது என்று சொந்த நாட்டுக்கு சென்று, அப்பா, மனைவி, பிள்ளைகளுடன் சில காலம் தான் சந்தோஷமாக இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறு வயதில் மிகவும் கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்த தனக்கு உழைப்பு எவ்வளவு முக்கியம் என்று கருத்து வௌியிட்டுள்ள அவர் தான் கடுமையான உழைப்பாளி என்றும் எப்போதும் உழைப்பை கைவிடப்போவதில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435