இணையவழி சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டத்திற்கு அழைப்பு

தற்போதைய சூழ்நிலை காரணமாக சர்வதேச உழைப்பாளர் தினத்தினை மே மாதம் 1 ஆம் திகதி கொண்டாட முடியாமையால்,இலங்கையிலுள்ள 24 ஊழியர் சங்கங்கள் இனைந்து இணையவழி (cyber) மே தின ஊர்வலம் ஒன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளது.

நீங்களும் இந்த இணையவழி மே தின ஊர்வலத்தில் 2020 May Day முகப்புத்தகம் வாயிலாக ( https://www.facebook.com/emayday2020/ )இனை like செய்து இனைந்துக்கொள்ளுமாறு சகோதரத்துடன் கேட்டுக்கொள்வதாக ஏற்பாடுகளை தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ளன.

இணையதளத்தில் மே தின கொண்டாட்டங்களை பொது சொத்து மற்றும் மனித உரிமை அமைப்பாக கொண்டாடும் 24 அமைப்புகள் பின்வருமாறு.

01. இலங்கை வ்கி ஊழியர் சங்கம் (CBEU)
02. இலங்கை வர்த்தகம், தொழில்துறை மற்றும் பொது ஊழியர் சங்கம் (CMU)
03. இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் (CESU)
04. ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு (UFL)
05. தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் (UPTO)
06.இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU)
07. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அனைத்து ஊழியர் சங்கம் (AEUIT)
08. சுதந்திர தடாக தொழிலாளர் சங்கம் (IDWU)
09. ஊடக ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு (FMETU)
10. இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் (SLWJU)
11. ஐக்கிய பொதுத் தொழிலாளர் சங்கம் (CCMU)
12. அரச அச்சுத்துறை சங்கம்
13. ரயில்வே தரப்படுத்தப்பட்ட தொழிற்சங்க கூட்டணி (RPTUA)
14. உணவு, பானம் மற்றும் புகையிலை தொழில் ஊழியர் சங்கம் (FBTIE)
15. பெண்கள் தொழிலாளர் ஒத்துழைப்பு ஒன்றியம் (WLSU)
16. வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம் (CIWU)
17. காப்பீட்டு ஊழியர் சங்கம் (IEU)
18. அனைத்து இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் (CTEU)
19. டெலிகொம் பொறியியலாளர் டிப்ளோமாதாரிகள் சங்கம் (TEDA)
20. அரச ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு (யுஎஃப்எல்)
21. காணி மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம் (MONLAR)
22. தேசிய மீன்வள ஒத்துழைப்பு இயக்கம் (NAFSO)
23. தேசிய மீன்வள நிபுணத்துவ சங்கம்
24 அனைத்து இலங்கை மீனவர்கள் தொழிற்சங்கம்

சைபர் மே தின கொண்டாட்டம் 2020 இன் நேரடி ஒளிபரப்பு. மே முதல் நாள் காலை 11 மணிக்கு பேஸ்புக்கில் ஒளிபரப்பப்படும்.

🔴 Cyber மே தின ஊர்வலத்தின் நேரடி ஒளிப்பரப்பு 2020 மே மாதம் 1 ஆம் திகதி காலை 11 மணியளவில் FB வழியாக…

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435