ஆடைத் தொழிற்துறை விற்பனைச் சங்கிலியில் பால் நிலை நீதி

பெண்களின் தொழில் உரிமைகள் தொடர்பான பூகோளதராதரமொன்றை உருவாக்குவதற்கு ஜெனிவாவிலுள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பில் இவ்வாரம் சமரசப் பேச்சுகள் நடைபெறுவதன் காரணமாக, குளோபல் லேபர் ஜஸ்டிஸ் (GLJ) மற்றும் ஏசியா புளோர்வேஜ் எலையன்ஸ் (AFWA) ஆகிய அமைப்புகள் கடந்த மாதம் அங்குரார்ப்பணம் செய்த தமது #Garment Me Too campaign இன் தொடர்ச்சியாக´ ஆடைத் தொழிற்துறை விற்பனைச் சங்கிலியில் பால் நிலை நீதி: துரிதகதியில் மாறும் நவநாகரிக நிலை மாற்றுவதற்கான நிகழ்ச்சிநிரல் ´(Gender Justice on Garment Global Supply Chains : An Agenda to TransformFast – Fashion) எனும் தலைப்பில் இன்று புதியதோர் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்தப் புதிய அறிக்கையானது, சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கான பரிந்துரைகளின் தொகுதியொன்றுடன் ஆடைக் கைத்தொழிற்சாலை உற்பத்தி நிரல்களில் (garment production lines) பால்நிலையை அடிப்படையாகக் கொண்டவன் முறை மற்றும் துன்புறுத்தல்களை (GBVH) எவ்வாறு முடிவுறுத்தலாம் என்பது குறித்து துரித கதியில் மாறும் நவநாகரிகத்துக்கான வியாபார நாமங்களுக்கு (fast fashion brands) தெளிவானதொரு செல்நெறியைக் காட்டுகிறது. இந்தப் பரிந்துரைகள் கூட்டுறவு பொறுப்புக்கூறல் அணுகுமுறையொன்றின் முக்கிய மூலக்கூறுகளை உள்ளடக்கியதான பால்நிலையை அடிப்படையாகக் கொண்டவன் முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான ஒரு நிலைமாற்ற அணுகுமுறையான ஏசியா புளோர்வேஜ் எலையன்ஸின் பாதுகாப்பு சுற்று வட்ட அணுகுமுறை பற்றிய முக்கிய தகவல்களுடன் பூகோள விற்பனைச் சங்கிலியிலுள்ள குறைந்த மட்ட வருமானம் பெறும் தொழிலாளர்களை மையப்படுத்தியுள்ளது.

´பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பான பிரச்சினைகளை சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் தொழிலாளர் மற்றும் மனித உரிமைகள் இயக்கம் என்பவற்றுக்கான முன்னுரிமையாக உருவாக்குவதற்காக பெண் தொழிலாளர்கள் ஒழுங்கமைந்துள்ளனர்´ என குளோபல் லேபர்ஜஸ்டிஸைச் சேர்ந்த ஜெனிபர் ரொசன்பயும் குறிப்பிடுகின்றார். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமவாயம் மற்றும் பரிந்துரை என்பன விற்பனைத் தளத்தில் வன்முறைகளையும் துன்புறுத்தல்களையும் முடிவுறுத்துவதற்கான ஆரம்பம் மட்டுமே. வியாபார நாமங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சங்கங்கள் என்பவற்றுக்கான வகிபாகங்களுடன் கூடிய´ பாதுகாப்பு சுற்றுவட்ட அணுகுமுறை´ போன்ற படைப்பாற்றல் மிக்க புதிய கூட்டிணைவுகள் உலகளாவிய ரீதியிலுள்ள விற்பனைச் சங்கிலிகளுக்குத் தேவைப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏசியா புளோர்வேஜ் எலையன்ஸின் பாதுகாப்பு சுற்றுவட்ட அணுகுமுறையானது, உற்பத்தி நிரல்களிலுள்ள பெண் தொழிலாளர்கள், அவர்களது தொழிற்சங்கங்கள், விநியோக தொழிற்சாலைகள் மற்றும் வியாபார நாமங்கள் என்பவற்றோடு இணைந்து ஏசியா புளோர்வேஜ் எலையன்ஸின் பெண் தலைமைத்துவ குழுவினால் வடிவமைக்கப்பட்டதாகும். இது, ஆடைத் தொழிற்சாலை உற்பத்தி நிரல்களில் நேர் கணிய அமைப்பியல் கலாசாரமொன்றை விருத்தி செய்யவும் அதனை நிலைபெறச் செய்யவும் ஆடைத் தொழிற்சாலைகளில் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் பதிலிறுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

சாட்சிய ஆய்வானது தெளிவாகவுள்ளது: ஆடைத் தொழிற்துறை விற்பனைச் சங்கிலியில் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளும் துன்புறுத்தல்களும் தொடர்வதுடன், தற்போதுள்ள அணுகுமுறைகள் பயனற்றவையாகும் என ஏசியா புளோர்வேஜ் எலையன்ஸின் பெண் தலைமைத்துவக் குழுவின் உறுப்பினரான எலிரொசிடாசிலபன் குறிப்பிடுகிறார். பல் தேசிய ஆடைத் தொழில் வியாபார நாமங்கள் இத்துறையின் நிலையினை சிக்கலான செல் நெறிகளை நோக்கி வழிப்படுத்தியுள்ளனர்: உற்பப்தி நிரல்களுக் கேற்ப பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளையும் துன்புறுத் தல்களையும் கண்டறிவதற்கான புதிய கருவியாக பாதுகாப்பு சுற்றுவட்ட உபாயத்தினை அவர்கள் பயன்படுத்துவார்களா? அன்றேல்,மலிவான ஊழியம் மற்றும் உயர் இலபாம் என்பவற்றுக்காக பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளிலும் துன்புறுத்தல்களிலும் தங்கியுள்ளதான வியாபார மாதிரியை அவர்கள் தொடரவுள்ளனரா? எனக் கேள்வி எழுப்புகிறார்.

ஏசியா புளோர்வேஜ் எலையன்ஸின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அனானியா பாதாசர்ஜி குறிப்பிடுகையில், குறைந்த வருமானம் பெறுகின்ற தொழில்களிலுள்ள பெண்கள் தமக்காகக் குரல் கொடுக்கின்ற போது, அவர்கள் அதற்கான உடனடி பதிலடியையும் பழிவாங்கலையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. துரித கதியில் மாறும் நவநாகரிக விற்பனை நாமங்கள் தமது விற்பனைச் சங்கிலியில் பால்நிலையை அடிப்படையாகக் கொண்டவன் முறைகளையும் துன்புறுத்தல்களையும் தடுப்பது தொடர்பில் கடுமையாக இருப்பார்களாயின், அவர்கள் பாதுகாப்பு ற்றுவட்ட அணுகுமுறையைத் தழுவிக் கொள்வதுடன், அவர்களது விநியோகஸ்தர்கள் உள்ளுர் மட்டத்திலும் பிராந்திய ரீதியிலும் ஏசியா புளோர்வேஜ் எலையன்ஸின் பெண் தலைமைத்துவக் குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

ஏசியா புளோர்வேஜ் எலையன்ஸின் பெண் தலைமைத்துவக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான வீ.பி. ருக்மணி கூறுகையில், இந்த அறிக்கையானது, ஆசியாவிலுள்ள அனைத்து ஆடைக் கைத்தொழிற்துறை விற்பனைச் சங்கிலிகளும் இது தொடர்பில் செயற்படுவதற்கான ஓர் அழைப்பாகும். பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளைத் தீர்ப்பதற்கு தமது உள்ளக மனத்தாங்கல் பொறிமுறை (internal grievance mechanisms) வெற்றிகரமாக அமையவில்லை என்பதில் ஆடைத் தொழிற்துறை வியாபார நாமங்கள் பொதுவாக உடன்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டின் எமது அறிக்கையிலும் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு சுற்றுவட்ட உபாய அணுகுமுறையை வியாபார நாமங்கள் தழுவிக் கொள்ள வேண்டும் என்பதே அவற்றுக்கான எமது பதிலிறுப்பாகும். இந்த வழியில் கூட்டு பயிற்சி நெறிகளினூடாக பொதுவான தொருபுரிதலை விருத்தி செய்வதன் மூலம்பால் நிலையை அடிப்படையாகக் கொண்டவன் முறையற்றதொழிலிட மொன்றை உருவாக்குவதற்கு மேற்பார்வையாளர்களும் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற முடியும் என்றார்.

எச்,எம் மற்றும் வோல்மார்ட் ஆகியன உள்ளடங்கலாக ஆசியாவின் ஆடைத்தொழிற்துறை விற்பனைச் சங்கிலியில் இடம்பெறும் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறையை ஆவணப்படுத்திய 2018 ஆம் ஆண்டின் பூகோள விற்பனைச் சங்கிலி ஆய்வு # Garment Me Too campaign ஐ கட்டியெழுப்பியது. இந்த அறிக்கையானது, ஆசியாவின் பூகோள ஆடைத் தொழிற்சாலை விற்பனைச் சங்கிலியில் இடம்பெறும் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை மற்றும் துன்புறுத்தல்களின் போக்குகளை ஆவணப்படுத்தியும் பகுப்பாய்வு செய்துமுள்ளது. இந்த ஆய்வானது, ஆடைத் தொழிற்துறையின் பூகோள விற்பனைச் சங்கிலியில் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கான கேள்விக்கிட மற்ற கலாசாரத்தை கூட்டிணைந்த வகையில் நிலைமாற்றுவதனை நோக்காகக் கொண்டு வியாபார நாமங்களுடன் சமசரப் பேச்சுகளுக்கு தலைப்படுத்தக் கூடியதாக ஒழுங்கமைக்கப்பட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்த பதினான்கு பெண் தொழிற்சங்கங்கத் தலைவர்கள் உள்ளடங்கியுள்ள ஏசியா புளோர்வேஜின் பெண் தலைமைத்துவக் குழுவின் உருவாக்கத்துக்கும் வழிகோலியது.

2018 ஆம் ஆண்டின் பூகோள விற்பனைச் சங்கிலி அறிக்கைகள் 17 நாடுகளிலுள்ள 50 இற்கும் மேற்பட்ட புதிய கடைத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளதுடன், தேசமானது பூகோள நவநாகரிக துறைக்கான #MeToo இயக்கம் என விபரிக்கப்படுகிறது. மேலும், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி எச்,எம் மற்றும் கெப் என்பன ஆடைத்தொழிற்துறை விற்பனைச் சங்கிலியில் பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறை உள்ளடங்கலாக தொழிலிடவன் முறைகள் பற்றி சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இணைப்பு சமவாயத்திற்கான ஆதரவினை பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியிருந்தன.

நன்றி- அததெரண

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435