ஆசிரியர் பற்றாக்குறை நீக்க பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் கோரல்

ஊவா மாகாண சபையின் கீழ் இயங்கும் கஷ்டப்பிரதேச தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளில் நிலவும் 86 ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான  போடடிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளிமிருந்து கோரப்பட்டுள்ளன.

இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-1 இற்கு இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது,

ஊவா மாகாணத்தில் ஆகக்குறைந்தது 3 வருடங்களாவது நிரந்தர வதிவிடமாக கொண்டவர்கள் மாத்திரமே இப்போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 45 என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களை இன்றைய தின வர்த்தமானி அறிவித்தலில் பெற்றுக்கொள்ள முடியும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435