அவுஸ்திரேலியா நோக்கிப் பயணிக்கும் இலங்கை அகதிகளின் படகுகள்

இலங்கை அகதிகள் பயணிக்கும் 6க்கும் மேற்பட்ட படகுகள் அவுஸ்திரேலியா நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அது குறித்து விசேட விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த படகுகளில் இடைமறிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த 20 இலங்கை அகதிகள் அடங்கிய படகொன்று, திருப்பி அனுப்பப்பட்டிருந்தது.

இலங்கை அகதிகளின் படகுகள் மீண்டும் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்தவிடயம் குறித்து அவதானம் செலுத்தும் நோக்கிலேயே அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டுற்றன் இன்று இலங்கை வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435