அரச வைத்திய அதிகாரிகள் சங்க கோரிக்கை நிராகரிப்பு

இலங்கை வைத்திய அமைப்புக்கு எதிராக மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவன் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் தலையீடு செய்வதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) நிராகரித்துள்ளது.

குறித்த மனு தொடர்பில் தலையிட்டு கருத்து தெரிவிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட 13 சங்கத்தினரால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தி பத்மன் சூரசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435