அரச நிறுவனங்களுக்குள் இனி வெற்றிலை, புகைத்தல் தடை!

அரசாங்க நிறுவனங்களுக்குள் வெற்றிலை மற்றும் புகையிலைசார் பொருட்கள் பாவனை முற்றாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சுற்றுநிரூபத்தை அரசாங்க நிறுவனங்களுக்கு அனுப்புவதற்காக சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகில் காணப்படும் அபாயகரமான நோய்களில் முதலிடத்தில் உள்ள புற்றுநோயின் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் அதனை தடுப்பதற்கான ஒரு கட்டமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1985ம் ஆண்டு புற்றுநோய்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 31.6 ஆக இருந்த நிலையில் 2011ம் ஆண்டு அவ்வெண்ணிக்கை 83.7 ஆக அதிகரித்துள்ளது.

வாய்ப்புற்றுநோய் அதிகமாக ஆண்களையே தாக்குகிறது. ஆண்டுக்கு 2500 பேர் வாய்ப்புற்றுநோயினால் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். வெற்றிலை உண்பது இலங்கை மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் கலாசார ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கமாயினும் அதனால் புற்றுநோய் ஆபத்து அதிகமாக காணப்படுகிறது என்று அமைச்சு வௌியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் 18-65 வயதானவர்களே அதிகமாக புற்றுநோய்க்குள்ளாகின்றனர். அவர்களில் 26 வீதமான ஆண்களும் 5 வீதமான பெண்களும் புகைக்கப்படாத புகையிலைப் பொருட்களினால் ஏற்படும் புற்றுநோய்க்காளாகியுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது..එමෙන්ම

புகையிலைச்சார் பெருட்கள் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை என்பன ஏற்கனவே நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், புகையிலை, வெற்றிலை, மற்றும் பாக்குசார் உற்பத்திகள்பாவனை, விற்பனை என்பன தடை செய்து அரச நிருவாக சுற்றுநிரூபம் வௌியிடுவதனூடாக அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அவசியமான நிருவாக நடவடிக்கையை இலகுவாக முன்னெடுக்க முடியும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435