அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிப்பதில் தொடரும் இழுபறி

 

அரசியல் குழப்ப நிலைமையின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை அடுத்து, அமைச்சுக்களின் கீழ்வரும் அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிப்பதில் இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு, தலைவர்களை நியமிப்பது குறித்த இறுதி கலந்துரையாடல் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட குழுவிற்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலின் பின்னர் அரச நிறுவனங்களின் தலைவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் உட்பட விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களினால் குறித்த பெயர் விபரங்கள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435