அரச, தனியார் வங்கி ஊழியர்கள் விரைவில் வேலைநிறுத்தம்?

அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊழியர் சங்கங்கங்கள் 19 ஒன்றிணைந்து பாரிய தொழிற்சங்க நடவடிகையை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர்கள் சங்க பிரதான செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மருதானை, விகாரை வீதியில் உள்ள இலங்கை வங்கி ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஓய்வூதிய பிரச்சினை மற்றும் ஊழியர் நலன்புரி நிதிக்கு வரி அறவிடுதல் போன்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டியே இத்தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தமது பிரச்சினை குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் நிதியமைச்சுக்கு தெரியப்படுத்திபோதிலும் இதுவரையில் உரிய தீர்மானம் எட்டப்படவில்லை. 1996ம் ஆண்டுக்கு பிறகு அரச வங்கிகளில் இணைந்த ஊழியர்களுக்கு உருவாக்கப்பட்ட ஓய்வூதிய முறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் புதிய வருமான சட்ட மூலத்தினூடாக ஊழியர் நலன்புரி நிதியத்திற்கு வரி விதித்தல் என்பவற்றுக்கு எதிராக நாம் இத்தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கிறோம் என்று ரஞ்சன் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்கூறப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 20ம் திகதி நிதியமைச்சுடன் இறுதி கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது. கலந்துரையாடல் வெற்றியளிக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலுக்கு இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாக்க, அரச மற்றும் தனிாயர் வங்கி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435