அரச சேவையில் புதிதாக இணையும் 3888 அதிகாரிகள்

பாடசாலை மட்டங்களில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக புதிதாக 3888 விளையாட்டுப் பயிற்சி அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

சர்வதேச, தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் இடம்பெற்ற போட்டிகளில் சிறந்த வெற்றிகளை பெற்ற விளையாட்டு வீரர்களே இவ்வாறு பாடசாலை சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர்.

செயன்முறைப்பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வு என்பவற்றினூடாக தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான வதிவிட பயிற்சிகளை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதுடன் பயிற்சியின் பின்னர் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு விளையாட்டுப் பயிற்சியாளர்களாக அவர்கள் உள்வாங்கப்படுவார்கள்.

தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு நியமனங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (13) காலை 11.30 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் உட்பட பலர் பங்களிப்பில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435