அரச சேவையில் 2015 இன் பின் இணைந்தோருக்கான ஓய்வூதியத் திட்டம்

அரச சேவையில் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஓய்வூதியத் திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பிலான ஆலோசனை உரிய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய சம்பள ஆணைக்குழுவின் தலைவர் எஸ் ரனுக்கே தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆண்டின் பின்னர் சேவையில் இணைந்தோருக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பிலேயே இவ்வாலோசனை கையளிக்கப்பட்டுள்ளது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015ம் ஆண்டுக்குப் பின்னர் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டபோதிலும் ஓய்வூதியத் திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை. எதிர்காலத்தில் ஓய்வூதியம் தொடர்பில் அரசாங்கம் எந்த தீர்மானத்தை எடுத்தாலும் அதற்கு அதற்கு இணக்கம் தெரிவிப்பது என்று அவர்களுடைய நியமனக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது செயற்படுத்தப்படும் அரச சேவை சேவை ஓய்வூதிய சம்பள முறையை எதிர்காலத்தில் மாற்றத்திற்குட்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகள் உரிய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி- தினகரன்/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435