அரச ஊழியர்களின் கடமை நேரத்தில் மாற்றம்?

அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கும நேரத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் என வாராந்த நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் 20ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக, சமூக இடைவெளியை பேணுவதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அரச ஊழியர்கள் சேவைக்கு சமூகம் அளிக்கும் நேரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435