அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணங்கள் மறு அறிவித்தல்வரை இரத்து

அனைத்து அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணங்கள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் இது குறித்த கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும், மாகாண செயலாளர்களுக்கும், ஆளுநர்களின் செயலாளர்களுக்கும் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணிப்புரையை, தமக்கு கீழ் இயங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அறியப்படுத்துமாறு ஜனாதிபதி செயலாளரினால் நேற்று முன்தினம் (19) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435