அரசாங்க தகவல் திணைக்கள ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு

2020 ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ நேற்று (16)  ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

2020 ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி அன்று காலை 9.30 க்கு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுகாதாரப் பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து ஊடகவியலாளர்களின் தகவல்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் தற்பொழுது சம்பந்தப்பட்ட சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, தேவையேற்பட்டால், சம்பந்தப்பட்ட சுகாதார ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சுகாதாரப் பிரிவினால் இந்த உடகவியலாளர்களுக்கு விரைவாக அறிவிக்கப்படும்.

இருப்பினும், வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என சந்தேகிக்கப்படும் ஊடகவியலாளர் தொடர்பில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் சுகாதார பரிசோதனையின் பெறுபேறு கிடைக்கும் வரையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து ஊடகவியலாளர்களும் வெளி சமூக தொடர்புகளை தவித்துக்கொள்ளல் வேண்டும். பாதுகாப்பாக வீடுகளில்; இருக்குமாறு ஆலோசனை வழங்கி சுகாதார அமைச்சின்  தொற்று நோயியல் பிரிவு எமக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பாக உங்களது நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட ஊடகயிலாளர்களுக்கு தெளிவுபடுத்துமாறு இதன் மூலம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இதற்கு நீங்கள் வழங்கும் ஒத்துழைப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435