அதிபர், ஆசிரியர் பணி பகிஸ்கரிப்பு 8 ஆம் திகதி நடைபெறாது- ஜோசப் ஜோசப் ஸ்டாலின் –

எதிர்வரும் 8 ஆம் திகதி – அதிபர், ஆசிரியர் தொழிங்சங்கங்களினால் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்பகிஸ்கரிப்பு, ஜனாதிபதித் தேர்தல் முடிவுறும் வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (05) அமைச்சரவை கூடியிருந்த போதும் – சம்பள ஆணைக்குழுவினரால் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படாமையாலேயே முடிவினை மேற்கொள்ள முடியாது போனதாக கல்வியமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் – சம்பள ஆணைக்குழுவினரின் தீர்மானம் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஒன்றாகக் கூடியே எடுக்கமுடியும் எனவும் – எதிர்வரும் 14 ஆம் திகதியே சம்பள ஆணைக்குழு கூடவுள்ளதால்- அந்த அறிக்கையைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை என்வும் கல்வியமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் – ஏற்கனவே தீர்மானித்தபடி எதிர்வரும் 8 ஆம் திகதி – பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்த போது – தேர்தல்கள் ஆணையாளர் தொழிற்சங்க உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது – தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் – தொழிற்சங்கப் போராட்டம் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை செலுத்தும். அதேவேளை – தேர்தல் காலங்களில் – புதிய தீர்மானங்களை அரசாங்கத்தால் எடுப்பதும் வாக்குறுதிகளை வழங்குவதும் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயற்பாடாகவே அமையும். இதனால் – அரசாங்கம் எடுக்கும் முடிவுகளிலும் தேர்தல் திணைக்களம் தலையிடவேண்டிய நிலை ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல் – தேர்தல் கடமைகளில் – அதிபர், ஆசிரியர்களும் ஈடுபடவுள்ள நிலையில் – அவர்களுக்கான தேர்தல் வகுப்புகளும் நடைபெறவுள்ள நிலையில் – தேர்தல் செயற்பாடுகளையும் தொழிற்சங்கப்போராட்டம் பாதிப்படையச் செய்யும். இதனால் – இப்போராட்டத்தை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடத்தவேண்டாம் என தேர்தல் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் – அதிபர், ஆசிரியர் தொடர்பான சம்பளப் பிரச்சினை தொடர்பாக – விரைவாக பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பள ஆணைக்குழுவுக்கும், கல்வியமைச்சுக்கும் தான் எழுத்துமூலம் கோரிக்கையை முன்வைப்பதாகவும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு – தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாகவும் – நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் – தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435