அதிகாரிகள் போராட்டம்: சமுர்த்தி வங்கிச் செயற்பாடுகள் இன்று முடக்கம்

 

சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய உற்பத்தி உதவி அதிகாரிகள் இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய உதவி அதிகாரிகள் சங்கம் செயலாளர் ஜகத் குமார இதரன தெரிவித்துள்ளார்.

நிர்வாக பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமுர்த்தி வங்கி உள்ளிட்ட சமுர்த்திதுறை பணிகளிலிருந்து விலகியிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

29 ஆம் திகதிவரை வங்கிகளில் பணம் வைப்பிலிடல் மற்றும் கடன் கொடுக்கல் – வாங்கல் முதலான விடயங்களில் அதிகாரிகள் விலகியிருக்க உள்ளனர்.

அரசாங்கம் தங்களுது பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளாததன் காரணமாக இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது என அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய உதவி அதிகாரிகள் சங்கம் செயலாளர் ஜகத் குமார இதரன தெரிவித்துள்ளார்.

சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய உதவி அதிகாரிகளின் வேதனத்தை குறைத்து, எதிர்கால பாதுகாப்பு குறித்த கேள்வியைத் தோற்றுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435