அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை தொகை வழங்குமாறு போராட்டம்

அதிகரிக்கப்பட்ட உத்தேச ஓய்வூதியத் தொகையை வழங்குமாறு கோரி ஓய்வு பெற்ற ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று (19) கண்டியில் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இவ்வருடம் (2020) ஜனவரி மாதம் தொடக்கம் அதிகரிக்கப்படவிருந்த ஓய்வூதியத் தொகையை புதிய அரசாங்கம் இடைநிறுத்தியதை எதிர்த்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரச மற்றும் மத்திய ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஒன்றியம் (2016 -2019) ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டமானது கண்டி மாநகரசபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

2016 -2019ம் ஆண்டுக் காலப்பகுதியில் ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட தொகையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இடைநிறுத்தப்பட்ட அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை எதிர்வரும் மார்ச் மாதம் ஓய்வூதியத்துடன் இணைத்து தருமாறு நாம் அரசிடம் கோருகிறோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435